ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி கான்செப்ட் டீசர் வெளியானது – 2020 ஆட்டோ எக்ஸ்போ

Skoda VISION IN

பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியாக உள்ள ஸ்கோடா விஷன் இன் காம்பாக்ட் எஸ்யூவி கான்செப்ட்டின் இன்டிரியர் படம் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள ஸ்கோடா காமிக் காரின் தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டு 4.26 மீட்டர் நீளம் பெற்ற எஸ்யூவி காராக வெளியாக உள்ள விஷன் இன் கான்செப்டின் உற்பத்தி நிலை மாடல் வோக்ஸ்வேகனின் MQB A0 IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளதால் பெரும்பாலான உதிரி பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளது.

வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் இடம்பெற்றுள்ள டிசைன் அம்சங்கள் தற்போது கிடைக்கின்ற மாடல்களில் உள்ளதை போன்றே அமைந்திருப்பதுடன் ஃபீரி ஸ்டேண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்டரல் கன்சோலில் உள்ளது. மேலும் பெருவாரியாக சென்டரல் கன்சோல், டேஸ்போர்ட், ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கதவு பேனல்களில் ஆரஞ்சு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெறுகின்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பெற உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்கோடா விஷன் இன் கான்செப்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகியவை இடம்பெறலாம். டீசல் என்ஜின் குறித்தான தகவல் இல்லை. மேலும், முதன்முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வரவுள்ள விஷன் இன் விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் முதல் காலண்டில் எதிர்பார்க்கலாம்.