கியா மோட்டார் இந்தியாவின் முதல் கார் பெயர் செல்டாஸ் எஸ்யூவி

0

kia seltos suv

இந்தியாவின் கியா மோட்டார் கார்ப்பரேஷனின் முதல் காரின் பெயர் கியா செல்டோஸ் (Kia Seltos) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கியா எஸ்பி என்ற பெயரில் தற்போது வரை இந்த எஸ்யூவி கார் அறியப்பட்டு வருகின்றது.

Google News

கியா செல்டாஸ் இந்தியா மட்டுமல்லமாமல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தின் துனை பிராண்டாக கியா மோட்டார் செயல்படுகின்றது.

கியா செல்டோஸ் எஸ்யூவி எதிர்பார்ப்புகள்

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முறையாக கியா எஸ்பி கான்செப்ட் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலினை இந்தியாவில் ஜூன் 20 ஆம் தேதி அதிகார்வப்பூர்வமாக அறிமுக செய்யப்பட உள்ளது.

முன்பாக SP2i என்ற அறியப்பட்டு வரும் நிலையில் இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் 1.4 லிட்டர் என்ஜின் பற்றி உறுதியான தகவல் இல்லை.

Kia SP2i Interior

இன்டிரியரில் 10.25 அங்குல அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி காரைச் சுற்றி காண்பதற்கான கேமரா, வயர்லெஸ் சார்ஜர் , கார் வை-ஃபை உள்ளிட்ட அம்சங்களுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்றவறை கொண்டிருக்கலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி விலை ரூபாய் 9 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை அமைந்திருக்கலாம்.

kia seltos suv

seltos rear

  • image Credit: Chris Doane Automotive autoblog.com