ரூ.5.29 லட்சம் ஆரம்ப விலையில் டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வெளியானது

0

tata altroz car red color 1

இந்தியாவின் மிகவும் ஸ்டைலிஷான மற்றும் பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.29 லட்சம் முதல் ரூ.9.29 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Google News

இம்பேக்ட் 2.0 டிசைன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் இந்நிறுவனத்தின் அல்ஃபா என்ற பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக ஸ்டைலிஷான புராஜெக்ட்ர் ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகள், 16 அங்குல லேசர் கட் அலாய் வீல், காரின் பின்புற கதவு கைப்பிடி ஆனது சி பில்லரிலும், 90 டிகிரி கோணத்தில் கதவுகளை திறக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காரினை சுற்றி பெரும்பாலான இடங்களில் கருப்பு நிற இன்ஷர்ட் மற்றும் டாப் வேரியண்டில் கருப்பு நிற மேற்கூறையை பெற்றுள்ளது.

2501 மிமீ நீளம் கொண்ட இன்டிரியரில் 5 இருக்கை வசதியுடன் தாராளமான இடவசதி மற்றும் நவீனத்துவமான இன்டிரியர் கருப்பு மற்றும் கிரே என இரு நிற கலவையில் மிகவும் பீரிமியர் தோற்ற அமைப்பினை வழங்கும் வகையிலும் கூடுதலாக டேஸ்போர்டில் சில்வர் இன்ஷர்ட்கள் ஸ்டீயரிங் வீலில் அமைந்துள்ளது. ஃபீரி ஸ்டாண்டிங் எனப்படுகின்ற நிற்கின்ற வகையிலான 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ  வழங்கப்பட்டுள்ளது.

tata-altroz-steering

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை டாடா அல்ட்ராஸ் காரில் உள்ள அனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார் உடன் கேமரா, வேக எச்சரிக்கை உடன் வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.

சமீபத்தில் இந்த மாடல் குளோபல் என்சிஏபி மைய கிராஷ் டெஸ்ட் சோதனையில், 5 நட்சத்திர மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பிலும், 3 நட்சத்திர மதிப்பீட்டை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பெற்றுள்ளது.

அல்ட்ராஸ் என்ஜின் விபரம்

1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ராஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வங்குகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அல்ட்ராஸ் காரில் XE, XM, XT, XZ மற்றும் XZ (O) என ஐந்து வேரியண்டுகளும், Rhythm, Style, Luxe மற்றும் Urban என நான்கு கஸ்டமைஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. டாப் வேரியண்ட் XZ (O) மாடலுக்கு எந்தவிதமான கஸ்டமைஸ் வசதியும் வழங்கப்படவில்லை.

போட்டியாளர்கள்

அல்ட்ரோஸ் காருக்கு நேரடி போட்டியை மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்கள் ஏற்படுத்த உள்ளது.

altroz rear

அல்ட்ராஸ் விலை பட்டியல்

Prices BS6 Ex-sh, ரூ.
Altroz Petrol XE 5,29,000
Altroz Petrol XM 6,15,000
Altroz Petrol XT 6,84,000
Altroz Petrol XZ 7,44,000
Altroz Petrol XZ(O) 7,69,000
Altroz Diesel XE 6,99,000
Altroz Diesel XM 7,75,000
Altroz Diesel XT 8,44,000
Altroz Diesel XZ 9,04,000
Altroz Diesel XZ (O) 9,29,000

altroz car price