Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Car News

மிகவும் பாதுகாப்பான, செம்ம ஸ்டைலிஷான கார்… டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட், விலை மற்றும் கஸ்டமைஸ் வசதிகள்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 22,January 2020
Share
3 Min Read
SHARE

டாடா அல்ட்ராஸ்

ரூ.5.29 லட்சம் ஆரம்ப முதல் விலை அறிவிக்கப்பட உள்ள டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் பெட்ரோல், டீசல் என்ஜினுடன் மொத்தமாக ஐந்து வேரியண்டுகள் மற்றும் நான்கு விதமான கஸ்டமைஸ் அம்சங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

முதலில் இரண்டு என்ஜின்களின் விபரத்தை அறிந்து கொள்ளலாம். முதற்கட்டமாக இரண்டிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்க உள்ளது.

1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ராஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம் ஆகும்.

அல்ட்ராஸ் காரில் XE, XM, XT, XZ மற்றும் XZ (O) என ஐந்து வேரியண்டுகளும், Rhythm, Style, Luxe மற்றும் Urban என நான்கு கஸ்டமைஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. டாப் வேரியண்ட் XZ (O) மாடலுக்கு எந்தவிதமான கஸ்டமைஸ் வசதியும் வழங்கப்படவில்லை.

பொதுவாக அனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை உடன் டிரைவிங் மோட் (சிட்டி மற்றும் ஈக்கோ) வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.

tata altroz dashboard

More Auto News

கியா செல்டோஸ்
2025 கியா செல்டோஸ் விலை ரூ.11.13 லட்சத்தில் துவங்குகின்றது.!
2020 மாருதி சுஸூகியின் டிசையர் காரின் 5 முக்கிய சிறப்புகள்
2024ல் வரவிருக்கும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார் மற்றும் எஸ்யூவி
மஹிந்திரா பொலிரோ பவர்+ விற்பனைக்கு வந்தது
புதிய ரெனோ க்விட் 1.0 RXL வேரியன்ட் விலை மற்றும் விபரம்

அல்ட்ராஸ் XE (பெட்ரோல் ரூ .5.29 லட்சம்; டீசல் ரூ .6.99 லட்சம்)

  • சென்டரல் லாக்கிங்
  • வீல் ஹப் கவர்
  • 4 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர்
  • மேனுவல் ஏசி

அல்ட்ராஸ் XE ரிதம் (ரூ.25,000)

கஸ்டமைஸ் ஆப்ஷனில் கூடுதலாக 3.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மடிக்கும் வகையிலான கீ உடன் இரட்டை ஹார்ன் மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் கிடைக்கும்.

tata altroz headlamps

அல்ட்ராஸ் XM (பெட்ரோல் ரூ .6.15 லட்சம்; டீசல் ரூ .7.75 லட்சம்)

XE  வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

  • 3.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 2 ஸ்பீக்கர்கள்
  • தானியங்கி ஓஆர்விஎம்
  • ரியர் பார்க்கிங் அசிஸ்ட்

அல்ட்ராஸ் XM ரிதம் (ரூ.39,000)

ரிதம் கஸ்டமைஸ் ஆப்ஷனில் கூடுதலாக 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் கேமரா மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் கிடைக்கும்.

அல்ட்ராஸ் XM ஸ்டைல் (ரூ.34,000)

அல்ட்ராசின் ஸ்டைல் கஸ்டமைஸ் ஆப்ஷனில் கூடுதலாக 16 அங்குல ஸ்டீல் வீல், மேற்கூறை கருப்பு நிறம், முன் மற்றும் பின்புற பனி விளக்குகள், பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் வழங்கப்படும்.

tata altroz 16-inch alloy wheel

அல்ட்ராஸ் XT (பெட்ரோல் ரூ .6.84 லட்சம்; டீசல் ரூ. 8.44 லட்சம்)

XM  வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

  • 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
  • ஸ்டார்ட் பட்டன்
  • பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள்
  • ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப்
  • கீலெஸ் என்ட்ரி
  • ஃபாலோ மீ ஹோம்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • 7.0 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்ட்டர்

அல்ட்ராஸ் XT லக்ஸ் (ரூ.39,000)

லக்ஸ் கஸ்டமைசில் 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல், மேற்கூறை கருப்பு நிறம், எக்ஸ்டீரியர் நிறத்துக்கு இணையான இன்டிரியர் மற்றும் பாடி நிறத்திலான மிரர் வழங்கப்படும்.

டாடா அல்ட்ராஸ்

அல்ட்ராஸ் XZ (பெட்ரோல் ரூ .7.44 லட்சம்; டீசல் ரூ .9.04 லட்சம்)

  • 16 அங்குல இரட்டை நிற அலாய் வீல்
  • ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்
  • ஆட்டோ ஏசி கட்டுப்பாடு
  • ஆம்பியன்ட் விளக்குகள்
  • ஆட்டோ ஹெட்லேம்ப்
  • பின்புற ஏசி வென்ட்
  • மழை உணர்திறன் வைப்பர்
  • அணியக்கூடிய வகையிலான கீ
  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள்
  • முன் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்
  • லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் மற்றும் கியர் நாப்

அல்ட்ராஸ் XZ அர்பன் (ரூ.30,000)

கருப்பு நிற மேற்கூறை வழங்கப்படும்

அல்ட்ராஸ் XZ (O) (பெட்ரோல் ரூ .7.69 லட்சம்; டீசல் ரூ .9.29 லட்சம்)

XZ வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக கருப்பு நிற மேற்கூறை வழங்கப்படும்.

அல்ட்ராஸ் காரின் விலை ரூ.5.29 முதல் ரூ.9.29 லட்சத்தில் அமைந்துள்ளது ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். பிப்ரவரி 2020-ல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.

ஹூண்டாய் ஆரா காரின் விற்பனை தேதி வெளியானது
5-டோர் மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது
வெளியானது லடா 4×4 விஷன் கான்செப்ட்
ரூ.13,000 வரை விலை உயர்ந்த ரெனோ ட்ரைபர் கார்
எம்ஜி ZS EV எலக்ட்ரிக் காரின் ADAS சிறப்புகள்
TAGGED:Tata Altroz
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
சுசூகி ஜிக்ஸர் sf 155
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 Royal Enfield scram 440
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved