ரூ.16.99 லட்சத்தில் டாடா ஹாரியர் XT+ விற்பனைக்கு வந்தது

0

Tata Harrier Xt Plus

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி காரில் கூடுதலாக பனேரோமிக் சன்ரூஃப் பெற்ற XT+ வேரியண்ட் ரூ.16.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள XT வேரியண்டை விட ரூ.40,000 கூடுதலாக அமைந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை செப்டம்பர் 30 வரை மட்டுமே.

Google News

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றிருக்கின்றது. இந்த வாகனத்தின் பவர் 170 பிஹெச்பி மற்றும் டார்க் 350 என்எம் வெளிப்படுத்துகின்றது.

ஹாரியர் எக்ஸ்டி+ வேரியண்டில் வழங்கப்பட்டுள்ள பனேரோமிக் சன்ரூஃப் மழையை உணர்ந்து தன்னாலே முடிக்கொள்ளுவதுடன், பார்க்கிங் சமயத்தில் தானாகவே மூடும் தன்மை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக அனைத்து ஹாரியர் மாடல்களிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை கிடைக்கும்.

தற்போது டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.13.84 லட்சம் முதல் அதிகபட்சமாக டார்க் எடிசன் மாடல் ரூ.20.30 லட்சம் (விற்பனையகம் டெல்லி) ஆகும்.