டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுக்கு மாற்றாக கூடுதலாக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வினை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வழங்க உள்ளது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி

இம்பேக்ட் டிசைன் அடிப்படையிலான டியாகோ, டிகோர் ஆகியவற்றை தொடர்ந்து நெக்ஸான் எஸ்யூவி மாடல் சிறப்பான வரவேற்பினை பெற்றதாக விளங்கி வரும் நிலையில், மேனுவல் கியர்பாக்சினை தவிர ஆட்டோமேடிக் மேனுவல் கியர்பாக்சிலும் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல், வரவுள்ள இந்த மாடலில் ரூ.11,000 செலுத்தி டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்குகின்றது. தற்போது புதிதாக 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் மல்டி டிரைவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோ மோடில் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் (மேனுவல் சமயங்களில் டிரிப்டரானிக்) ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. தற்போது புதிதாக 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் மல்டி டிரைவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோ மோடில் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ( டிரிப்டரானிக்) ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் இந்த காரில் இடம்பெற்றுள்ள ஆன்டி ஸ்டால், கிக்-ஆஃப் மற்றும் ஃபாஸ்ட் ஆஃப் ஆகிய நுட்பங்களை பெற்றுள்ளது. ஆன்டி ஸ்டால் எனப்படுவது திடீரென பிரேக்கிங் செய்யும் சமயங்களில் ஆக்சிலேரட்டரை குறைத்து டார்க் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வரும், கிக் ஆஃப் எனும் நுட்பம் திராட்டில் வேகத்தை கணக்கிட்டு டார்க்கினை அதிகரிக்க உதவும் மற்றும் ஃபாஸ்ட் ஆஃப் எனப்படுவது வேகத்தை அதிகரிக்க உதவும் நுட்பமாகும்.  மே மாதம் முதல் வாரத்தில் டாடா நெக்சான் ஏஎம்டி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Exit mobile version