டாடா நெக்ஸான் EV காரின் அறிமுக தேதி வெளியானது

0

nexon ev

இந்தியாவில் பரவலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் புதிய டாடா நெக்ஸான் EV காரை டிசம்பர் 19 ஆம் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. 250 கிமீ – 300 கிமீ ரேஞ்ச் வழங்கவல்லதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Google News

ஜிப்ட்ரான் டெக்னாலாஜி கொண்டதாக முதல் மாடலாக விற்பனைக்கு வெளியாக உள்ள நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிக்கு அதிகபட்சமாக 8 வருட வாரண்டியை வழங்க உள்ளது.

#TheUltimateElectricDrive விளம்பர பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு விதமான சோதனை ஓட்ட வீடியோக்கள் மற்றும் தரம் சார்ந்த சோதனைகளை கானொளியாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜிப்ட்ரான் நுட்பத்தின் படி குறைந்தபட்ச ரேஞ்ச் 250 கிமீ என தொடங்குவதுடன் மிக வேகமாக சார்ஜிங் செய்வதற்கான விரைவு சார்ஜிங் வசதி ஆப்ஷன் உட்பட லித்தியம் ஐயன் செல் கொண்ட பேட்டரியை பாதுகாக்க லிக்யூடு கூல்டு வசதியுடன், ஐடியல் வெப்பத்தை பராமரிக்கும் நோக்கில் வழங்கப்படும்.  உயர் ரக ஸ்டீல் பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பேட்டரிக்கு IP67 சான்றிதழ் பெற்றிருக்கும். எனவே, தூசு மற்றும் நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

அறிமுகம் செய்யப்பட உள்ள நெக்ஸான் பேட்டரி காரின் தோற்ற அமைப்பு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்ற மேம்படுத்தப்பட்ட மாடலில் அமைந்திருக்கும் என கருதப்படுகின்றது. எனவே, தோற்ற அமைப்பில் மிகவும் மாறுபாடான பம்பர், மேம்பட்ட கிரில் அமைப்பு, பின்புற பம்பர் மற்றும் டிசைன் அமைப்பில் மாற்றங்கள் பெற்றிருக்கும். இன்டிரியர் அமைப்பில் சில மேம்பாடுகளை பெற்றிருக்கும். எலெக்ட்ரிக் நெக்ஸான் காரில் அகலமான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று பல்வேறு டிஜிட்டல் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றிருக்கும்.

டாடா மோட்டார்ஸ் வெளியிட உள்ள எலெக்ட்ரிக் நெக்ஸான் காரின் விலை ரூ. 15 முதல் ரூ.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். இன்றைக்கு டாடா அல்ட்ரோஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அடுத்து 7 இருக்கை கொண்ட டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அடுத்த சில மாதங்களுக்குள் வெளியாக உள்ளது.