டியாகோ லிமிடெட் எடிசனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

0

new tata tiago limited edition

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றான டியாகோ காரில் லிமிடெட் எடிசன் ரூ.5.79 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 2000 யூனிட்டுகள் மட்டுமே லிமிடெட் எடிசனில் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Google News

பிஎஸ்-6 அறிமுகத்திற்கு பின்னர் டீசல் வேரியன்ட் நீக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது டியாகோ காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 86 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது. கடந்த வருடம் நடத்தப்பட்ட குளோபல் என்சிஏபி சோதனையின் மூலம் கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருந்தது.

tata tiago interior

சாதாரண XT வேரியண்டை அடிப்படையாக கொண்ட பிரத்தியேகமான லிமிடெட் எடிசனில் 14 அங்குல ஸ்டீல் வீலுக்கு மாற்றாக 14 அங்குல அலாய் வீல் கருமை நிறத்தில் வழங்கப்பட்டு, கூடுதலாக ஆன்-போர்டு நேவிகேஷன், 5.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான குரல் கட்டளைகள் மற்றும் பின்புற பார்சல் டிரே இணைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு, வெள்ளை, மற்றும் கிரே என மூன்று நிறங்களை பெற்று இரண்டு ஏர்பேக்குகள், பவர் ஃபோல்டிங் மிரர், கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகளுடன் வந்துள்ள லிமிடெட் எடிசன் மேனுவல் வேரியண்டில் மட்டும் கிடைக்கும்.

சாதாரண XT வேரியண்டை விட ரூ.29,000 வரை கூடுதலாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

2021 Tata Tiago விலை பட்டியல்
வேரியண்ட் விலை
Tiago XE ரூ. 4.86 லட்சம்
Tiago XT ரூ. 5.50 லட்சம்
Tiago Limited Edition ரூ. 5.79 லட்சம்
Tiago XZ ரூ. 5.95 லட்சம்
Tiago XZ+ ரூ. 6.23 லட்சம்
Tiago XZ+ Dual Tone ரூ. 6.33 லட்சம்
Tiago XZA ரூ. 6.47 லட்சம்
Tiago XZA+ ரூ. 6.75 லட்சம்
Tiago XZA+ Dual Tone ரூ. 6.85 லட்சம்

 

tata tiago rear