டாடா டியாகோ NRG ஏஎம்டி விற்பனைக்கு வெளியானது

tata tiago nrg

கிராஸ் ஹோட்ச் தோற்றத்தை வெளிப்படுத்தும் டாடா டியாகோ NRG காரில் கூடுதல் வசதிகள், பெட்ரோல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதலாக இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

பிரபலமான டியாகோ கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற மாடல்களில் ஒன்றாக விளங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷனில் என்ஆர்ஜி எடிஷன் கிடைக்கின்றது.

டாடா டியாகோ NRG

டியாகோ காரை விட கூடுதலாக தோற்ற அமைப்பில் பாடி கிளாடிங், ஸ்கிட் பிளேட்ஸ், ரூஃப் ரெயில் மற்றும் 14 அங்குல ஸ்டீல் ரிம் வீல் போன்றவற்றுடன் இன்டிரியர் அமைப்பில் 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றுடன் மேனுவல் ஏசி, பவர் அசிஸ்டெட் ஸ்டீயரிங், நான்கு கதவுகளில் பவர் விண்டோஸ், ரிமோட் லாக்கிங் போன்றவற்றுடன் வந்துள்ளது.

சமீபத்தில் டியாகோ காரில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாக வந்திருந்தது. தற்போது விற்பனைக்கு கிடைக்கின்ற 70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டியாகோ NRG ஏஎம்டி விலை ரூ.6.15 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)