புதிய டாடா டிகோர் XM வேரியன்ட் விற்பனைக்கு வந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவுக்கு புத்துயிர் அளித்த டியாகோ அடிப்படையிலான டாடா டிகோர் செடான் ரக மாடலில் கூடுதல் வசதிகளுடன் கூடிய  XM வேரியன்ட் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய டாடா டிகோர்

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்ற டிகோர் காரில்  69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 83.8 பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய XM வேரியன்ட் மாடல் XE மற்றும் XT வேரியன்ட்களுக்கு இடையில் மேனுவல் சென்டரல் லாக்கிங், முன் மற்றும் பின் கதவுகளில் பவர் வின்டோஸ், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், எல்இடி ஃப்யூவல் காஜ், ஃபேப்ரிக் இருக்கைகள், இன்டிரியர் லேம்ப் ஆகியவற்றுடன் 14 அங்குல ஸ்டீல் வீல் பெற்றதாக  வீல் கவர் உள்ளிட்ட 9 வசதிகளுடன் வந்துள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , அமியோ ,  டிசையர் , அமேஸ் மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் போன்ற கார்களுக்கு போட்டியாக விளங்கும் வகையில் டாடா டிகோர் செடான் கார் அமைந்திருக்கின்றது.

டாடா டிகோர் விலை பட்டியல் (சென்னை)
டாடா டிகோர் பெட்ரோல் டீசல்
XE ரூ.4,64,169 ரூ.5,46,552
XM ரூ. 5,06,778 ரூ.5,89,172
XT ரூ.5,36,060 ரூ.6,18,820
XZ ரூ.5,83,919 ரூ.6,66,807
XZ (O) ரூ.6,12,153 ரூ.6,95,127

Recommended For You