விரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்

toyota vellfire

இந்தியாவில் ரூபாய் 80 லட்சம் விலையில் டொயோட்டா நிறுவனம், வெல்ஃபயர் என்ற சொகுசு வசதிகளை கொண்ட எம்பிவி ரக மாடலை அக்டோபர் 2019-ல் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற
விதிகளை தளர்த்தியதை தொடர்ந்து, மெர்சிடிஸ் பென்ஸ் முதன்முதலில் உயர்தர எம்பிவி ரக மாடலை 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வி-கிளாஸ் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து சொகுசு எம்பிவி சந்தையில் டொயோட்டாவின் ஆறு இருக்கைகள் கொண்ட டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் வெளியிட உள்ளது.சமீபத்தில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்வில் வெல்ஃபயர் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வெல்ஃபயரில் எல்இடி ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளகுகள், நேர்த்தியான முன் பம்பர் மற்றும் கிரில், பனி விளக்குகளுக்கான முக்கோண ஹவுசிங் போன்றவற்றை பெற்று கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இன்டிரியரில் கருப்பு நிற டேஸ்போர்டினை பெற்று நேர்த்தியான முறையில் சொகுசு தன்மைகளை பெற்ற 6 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் வெல்ஃபயர் காரில் 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற இருக்கை பயணிகளுக்கு 10.2 அங்குல திரை பெற்ற பொழுதுபோக்கு தொகுப்பு மற்றும் மற்றும் 360 டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா கொண்டுள்ளது. எனவே, இந்தியாவிலும் இந்த வசதிகளை வழங்க வாய்ப்புகள் உள்ளது.

டொயோட்டா வெல்ஃபயரின் பிரவுச்சர் விவரங்களின் படி ஒரு பெட்ரோல்-ஹைப்ரிட் பவர் டிரெய்னுடன் வரும் என உறுதிப்படுத்துகிறது.  2.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 143 ஹெச்பி எலக்ட்ரிக் மோட்டார் (ஒருங்கிணைந்த பவர் 145 ஹெச்பி என மதிப்பிடப்படுகிறது) வெளிப்படுத்துகின்றது. ஆல் வீல் டிரைவ் வசதியுடன் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக இந்த கார் விளங்க உள்ளது.

toyota-vellfire-cabin