புதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது

 

Tata Tiago JTP & Tigor JTP

1.2 லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பெற்றதாக விளங்க உள்ளது. அதிகபட்சமாக 110 PS பவர் மற்றும் 150Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கின்றது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 10 விநாடிகளை எடுத்துக் கொள்கின்றது.

டாடா டியாகோ மற்றும் டைகோர் ஜே.டி.பி ட்வின்ஸ் மாடல்கள் இப்போது பளிச்சென தெரிகின்ற ஆட்டோ ஓஆர்விஎம் பெற்றுள்ளது. ஷார்ப் ஃபின் கொண்ட ஆன்டெனா, ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு நிரந்தரமாக வந்துள்ளது. டைமன்ட் கட் அலாய் வீல்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ரியர் ஸ்பாய்லர், சைட் ஸ்கர்ட்ஸ், கான்ட்ராஸ்ட் பெயிண்ட் ஷேட் மற்றும் கஸ்டம் அப்ஹோல்ஸ்ட்ரி வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக பாதுகாப்பு அம்சத்தில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈபிடி, கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் கொண்டுள்ளது.

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் கூடிய ஹர்மன்  7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது.

2019 டாடா டியாகோ ஜே.டி.பி விலை ரூ. 6.69 லட்சம்
2019 டாடா டிகோர் ஜே.டி.பி விலை ரூ. 7.59 லட்சம்

Tata Tiago JTP & Tigor JTP