ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வாகன் T-Roc எஸ்யூவி அறிமுகம், முன்பதிவு துவங்கியது

0

vw t-roc suv

ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வாகன் வெளியிட்டிருந்த T-Roc எஸ்யூவி காருக்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Google News

நமது நாட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒற்றை வேரியண்ட் பல்வேறு வசதிகளுடன் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற டாப் வேரியண்ட் மாடலாக விளங்கும். எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் விளக்குகள், டூயல் டோன் அலாய் வீல், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்றவற்றை பெற்றிருப்பதுடன் MQB பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் டிகுவான் எஸ்யூவி காருக்கு கீழாக விற்பனை செய்யப்பட உள்ளது.

இன்டிரியரை பொறுத்தவரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், இரு விதமான ஏசி கட்டுப்பாடு, 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ‘வியன்னா’  லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு சார்பான அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்சி, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் பார்க்கிங் கேமரா ஆகியவை பெற்றிருக்கும்.

டி-ராக் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மாடல் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்குவதுடன் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரவுள்ளது.

முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள ஃபோக்ஸ்வாகன் டி-ராக் எஸ்யூவி விலை ரூ.22 லட்சத்துக்கும் கூடுதலாக அமைந்திருக்கும்.