கோவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில்ல் நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா வென்டிலேட்டர் உட்பட மருத்துவப் பணியாளர்களுக்கு என சிறப்பு முக கவசத்தை தயாரிக்க உள்ளது. மார்ச் 30 ஆம் தேதி உற்பத்தி துவங்க உள்ள மஹிந்திரா முதற்கட்டமாக 500 கவசங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
மஹிந்திராவின் சிஇஓ பவன் குன்கா வெளியிட்டுள்ள டிவிட்டர் வலைப்பதிவில், நாங்களும் எங்களுடைய கூட்டணியாளரான ஃபோர்டு நிறுவனத்தின் வடிவமைப்பு உத்தியை பெற்று 500 முக கவசங்களை தயாரிக்கவும், படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்பாக, இந்நிறுவனம் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சைக்கு முக்கிய பங்காற்றுகின்ற உயர் காக்கும் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த வென்டிலேட்டருக்கான 3 முன்மாதிரியை உருவாக்கி உள்ளது. இதற்கு இந்த துறையில் முன்னோடி அனுபவம் உள்ளவர்களை கொண்டு சோதனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Update – With a design sourced from our partner Ford Motor, we are now ready to make this Face Shield for use of medical service providers. Targeting to make 500 on Monday and then ramp up. @MahindraRise @anandmahindra @PMOIndia update on ventilators on Monday. pic.twitter.com/x3UM1UdhcQ
— Pawan K Goenka (@GoenkaPk) March 28, 2020