பந்தயகளத்தில் சோகம்.., டாக்கர் 2020 ரேலியில் பாலோ கோன்கால்வ்ஸ் மறைவு

0

Paulo Goncalves passes away

2020 டாக்கர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தில் ஹீரோ மோட்டோ ஸ்போர்ஸ் சார்பாக பங்கேற்ற போர்ச்சுகல் நட்டைச் சார்ந்த பாலோ கோன்கால்வ்ஸ் (Paulo Goncalves) 7வது ஸ்டேஜில் திடீரென ஏற்பட்ட நிலை தடுமாற்றத்தால் கீழே விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google News

சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் 2020 டாக்கர் ரேலியின் 7 ஆம் கட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 40 வயதான அவர் இன்றைய நிலையில் இருந்துபோது 276 கி.மீ தொலைவில் காலை 10:08 மணிக்கு அமைப்பாளர்கள் ஒரு அவசர உதவி எச்சரிக்கையைப் பெற்றனர். அதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவ ஹெலிகாப்டரை அனுப்பி வைக்கப்பட்டது. காலை 10:16 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தது, உடனடியாக லயலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தினால் ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட் காரணமாக, அவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உலகின் மிகவும் சவால்கள் நிறைந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியான டாக்கர் ரேலியில் 13வது முறையாக பாலோ கோன்கால்வ்ஸ் பங்கேற்றிருந்தார் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும். கடந்த 2006 ஆம் டாக்கர் பந்தயத்தில் முதன்முறையாக இவர் பங்கேற்றார்.

ஸ்பீடி என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்ட ஸ்பீடி கோன்கால்வ்ஸ் என அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார். டாக்கரில் ஹோண்டா, பி.எம்.டபிள்யூ, ஹஸ்குவர்னா மற்றும் ஸ்பீட்பிரைன் ஆகியவற்றிற்காக போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது நமது நாட்டின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சார்பாக பங்கேற்றிருந்தார்.

ஆட்டோமொபைல் தமிழன் சார்பாக பவலோ கோன்கால்வ்ஸின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் குழு மற்றும் டாக்கர் அமைப்பிற்கும் இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.