Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் ஓட்டுனரில்லா கார்களுக்கு அனுமதியில்லை : நிதின் கட்காரி

by MR.Durai
25 July 2017, 10:07 am
in Auto News, Wired
0
ShareTweetSend

டெக் மற்றும் மோட்டார் நிறுவனங்கள் மிக கடுமையாக முயன்று வரும் தானியங்கி கார் நுட்பத்தினை செயல்படுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்பதனால் ஓட்டுனரில்லா கார்களை இந்தியாவில் அனுமதிக்க இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓட்டுனரில்லா கார்கள்

மெர்சிடிஸ், வால்வோ உள்ளிட்ட நிறுவனங்கள் கூகுள், ஆப்பிள் போன்ற டெக் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் டிரைவரில்லா கார் நுட்பத்தை இந்திய சந்தையில் அனுமதிக்க வாய்ப்பிலை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி ஓட்டுனரில்லா கார்கள் பற்றி கூறுகையில் எந்த காரணத்தை முன்னிட்டும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும் டிரைவரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதிக்க இயலாது என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்தியாவில் 22 லட்சத்துக்கு மேற்பட்ட வணிகரீதியான டிரைவர்கள் தேவை இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 100 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் இதன் வாயிலாக 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன சட்டம் (திருத்தம்) மசோதா 2017-ல் , தானியங்கி கார் போன்ற புதிய தொழில்நுட்பத்தின் சோதனைகளுக்கு அனுமதிக்கும் விதிகள் உள்ளன. “வாகன பொறியியல் துறைகளில் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுகளை மேம்படுத்துவதற்காக, இது வாகனங்கள் மற்றும் போக்குவரத்து பயன்பாட்டில் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த சட்டத்தின் விதிமுறைகளில் ஒன்று பொது மக்கள் பயன்படுத்துவதிலிருந்து ஒட்டுனரில்லா கார்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் வகையில் சட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் மாற்று எரிபொருளாக மின்சார கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எந்த வரிச்சலுகையும் வழங்கப்படாது என உறுதிப்படுத்தியுள்ளார்.

சாலையில் மின்சார கார்களை அதிகரிக்கும் நோக்கிலான திட்ட வரைவை செயல்படுத்துவதற்கான தீவரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் நாடு முழுவதும் உள்ள 180,000 பொது போக்குவரத்துத் துறை பேருந்துகளில் மின்சாரம் சார்ந்த வாகனங்களாக இயக்குவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கவும், பேருந்து நிலையங்களில் இதற்கு உண்டான அடிப்படை கட்டமைப்பினை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

Related Motor News

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ பஸ் அறிமுகமானது

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan