மின்சாரத்தில் இயங்கும் டெஸ்லா செமி டிரக் அறிமுகம்

0

tesla semi truck unveiledமின்சார கார் துறையில் சவாலான மாடல்களை அறிமுகம் செய்து வரும் டெஸ்லா நிறுவனம் நடுத்தர சரக்கு போக்குவரதக்குக்கு ஏற்ற வகையிலான டெஸ்லா செமி டிரக் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெஸ்லா செமி டிரக்

Tesla semi truck

Google News

எதிர்கால டிரக்கிங் என்ற நோக்கத்தை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள செமி டிரக் அதிகபட்சமாக 40 டன் எடையை தாங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நவீன நுட்பங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு சிறப்பு திறன்களை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த டிரக்கிற்கு டெஸ்லா 10 லட்சம் கிலோமீட்டர் அதாவது உலகை 40 முறை சுற்றி வந்தாலும் பிரேக் டவுன் ஆகாது என கியாரண்டி வழங்கியுள்ள செமி டிரக்கில் உள்ள பேட்டரி அதிகபட்சமாக 800 கிமீ சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

மேலும் சுமையில்லா டிரெயிலருடன் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 5 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும், 36,000 கிலோ எடையுடன் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 20 விநாடுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும் என டெஸ்லா உறுதிப்படுத்தியுள்ளது.

Tesla semi truck cabin

செமி டிரக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரி 644 கிமீ தொலைவிற்கான சார்ஜ் ஏறுவதற்கு என பிரத்தியேக சூப்பர் சார்ஜர்கள் பெற்றிருப்பதனால் 30 நிமிடங்களில் சார்ஜாகிவிடும் , எனவே வாகனத்தில் சரக்கினை ஏற்றும் அல்லது இறக்கும் நேரத்தில் சார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும்.

டீசல் டிரக்குகளை விட மிக அதிகப்படியான ஆயுளை கொண்டதாக இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள செமி மின்சார டிரக்கில் கிளட்ச் இல்லாத டிரக்காக வடிவமைப்பட்டு கேபின் மத்தியில் ஒட்டுநர் இருக்கை வழங்கப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 104 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக உள்ள டிரக்கின் பராமரிப்பு செலவு டீசல் டிரக்குகளை விட குறைவாக அமைந்திருக்கும்.

வருகின்ற 2019 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு செல்ல உள்ள டெஸ்லா செமி டிரக் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Tesla semi truck front Tesla semi truck side Tesla Semi rear