சார்ஜிங் உள்கட்டமைப்பு ரூ .1750 கோடி முதலீடு செய்கிறது எஸ்ஸல்

உத்திர பிரதேசத்தில் உள்ள 20 நகரங்களில், 250 சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் 1000 பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை உருவாக்க 1750 கோடி ரூபாய் முதலீடு செய்ய எஸ்ஸல் இன்ஃப்ராபிரோட்க்ஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை அமைத்து, எலெக்ட்ரிக் வாகனங்கள் எக்கோசிஸ்டம்களை உருவாக்கும் முயற்சியில் எஸ்ஸல் நிறுவனம், இறங்கியுள்ளது,

இதுகுறித்து பேசிய எஸ்ஸல் நிறுவன உயர் அதிகாரி சுபாஷ் சந்திரா தெரிவிக்கையில், இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநிலங்களில் ஆதரவை பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். எலெக்ட்ரிக் வாகனங்களை ஹோலோச்டிக் முறையில் அறிமுகம் செய்து, மாவட்ட போக்குவரத்து கட்டமைப்பை மேம்ப்டுத்துவதுடன் வேலை வாய்பையும் உருவாக்கும்.

லக்னோவில் பிரதமர் மோடி பங்கேற்ற அடிக்கல் நாட்டு விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த் விழாவில் EIL-ன் எலெக்ட்ரி வாகனங்கள் அறிமுகம் உள்பட்ட பல்வேறு தொழிற்சாலை திட்டங்ககள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டம், உள்ளூர் போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் ஏற்பட்ட தடுமாற்றம் மற்றும் அடைந்த கடைசி மைல் இணைப்பு பிரச்சினை குறித்தும் விவாதிக்கும்.

இதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு 2 சதுர கிலோ மீட்டரிலும் பேட்டரி ஸ்வாபிங் ஸ்டேஷன் அமைக்கப்படும், இந்த திட்டம் காசியாபாத்தில் இருந்து தொடங்கபட உள்ளது. தொடர்ந்து லக்னோ, கான்பூர், ஆக்ரா, நொய்டா, மீரட், வாரணாசி, கோரக்பூர், அலாகாபாத் போன்ற பிற நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.