கார் மற்றும் பைக்குகளின் பிரியர்கள் தங்களுடைய விருப்பமான மாடல்களை தங்கள் எண்ணம் போல கஸ்டமைஸ் செய்வது வழக்கம் தான் இந்த வகையில் ஃபியட் 500 காரை காமசூத்ரா படங்களால் அலங்கரித்து அதிர்ச்சியை இத்தாலி கஸ்டமைஸ் நிறுவனம் ஒன்று கிளப்பியுள்ளது.

காம(கார்)சூத்ரா கார் – ஃபியட் 500

கார் பெயர் மட்டுமல்ல கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள ஸ்டிக்கரிங்  இதற்காக பயன்படுத்தபட்டுள்ள நுட்பமும் உங்களை திக்குமுக்காட வைக்கும் எவ்வாறு வாருங்கள் அறிந்துகொள்ளங்கள்.

Kar_masutra என பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபியட் 500 காரில் வெளிதோற்ற அமைப்பில் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் காமசூத்திரா படங்கள் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ள நுட்பங்களில் வெப்பத்தினால் மறையும் வகையிலான தெர்மோக்ரோமிக் நுட்பம் இடம்பெற்றுள்ளது. அதாவது கார் வெப்பமடைந்தால் (சூடானால்) இந்த நுட்பத்தின் வாயிலாக சென்சார் என மறைக்கப்பட்டுள்ள பகுதியில் அனைத்தும் வெளிப்படும். சென்சார் நீக்கப்பட்ட படங்களாக கார் காட்சியளிக்கும்.

உள்ளே இன்னும் அதிர்ச்சியான சில சூடாக்கும் மேட்டர்களை இணைத்துள்ளது. பெரும்பாலான ஆக்செரிஸ்கள் முதல் கியர் லிவர் வரை அனைத்தும் வயது வந்தோர் பொருட்களை போல கஸ்டமைஸ் செய்துள்ளனர்.

முழுமையாக காண படங்களை பார்க்கலாம்…