வருகின்ற ஜனவரி 2019 முதல், பெரும்பாலான கார் நிறுவனங்கள் மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப விலை உயர்த்த தொடங்கியுள்ள நிலையில் ஃபோர்டு இந்தியா தனது மாடல்களை விலையை உயர்த்துவாக அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மாறிவரும் வெளிநாட்டு செலாவனி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தின் ஃபீகோ, ஃபீரிஸ்டைல், ஆஸ்பயர், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டேவர், உயர்ரக மஸில் காராக விளங்கும் மஸ்டாங் உள்ளிட்ட அனைத்து மாடல்களின் விலையும் 2.5 சதவீதம் வரை உயர்த்தப்படுகின்றது.

சமீபத்தில் மாருதி, டாடா மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ரெனோ உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.