Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

by நிவின் கார்த்தி
25 November 2025, 7:40 am
in Auto News
0
ShareTweetSend

victoris suv

இந்தியாவில் தற்பொழுது நடைமுறையில் உள்ள BNCAP அடுத்த நிலைக்கு ஏடுத்துச் செல்ல சாலைப் பாதுகாப்பை சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்துவதற்காக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH), புதிய காருக்கான பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டமான பாரத் NCAP-ன் (Bharat New Car Assessment Program) இரண்டாம் கட்டத்தை Bharat NCAP 2.0 என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதற்கான வரைவு அறிக்கையை (Draft AIS-197, Revision 1) வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அக்டோபர் 1, 2027 அன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்கும் வாகனங்களுக்கான M1 வகையில் உள்ள 3500 kg-க்கும் குறைவான எடை கொண்ட கார்களில் ESC மற்றும் கர்டெயின் ஏர்பேக் உள்ளிட்ட சில அடிப்படைத் தகுதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் பக்கவாட்டில் இருக்கை அமைந்த வாகனங்கள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவசரகால தானியங்கி பிரேக் ஆப்ஷனலாக உள்ளது.

BNCAP 2.0 பாதுகாப்பின் அடுத்தகட்ட நகர்வு.!

புதிதாக வரவுள்ள பாதுகாப்பு சார்ந்த பிரிவில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற 100 புள்ளி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துகிறது, விபத்து பாதுகாப்பு (55 சதவீதம்), பாதிக்கப்படக்கூடிய சாலை-பயனர் பாதுகாப்பு (20 சதவீதம்), பாதுகாப்பான ஓட்டுநர் (10 சதவீதம்), விபத்து தவிர்ப்பு (10 சதவீதம்) மற்றும் விபத்துக்குப் பிந்தைய பாதுகாப்பு (5 சதவீதம்) என 5 பிரிவுகளில் குறைந்தபட்சம் 70 % எடுத்தால் 5 ஸ்டார் ரேட்டிங் ஆனது 2027-2029 ஆம் ஆண்டு வரை வழங்கப்படும். அதன் பிறகு, 2029-2031 முதல் 80 புள்ளிகளாக உயரத்தப்பட உள்ளது.

பாரத் NCAP 2.0 விளக்க அட்டவனை

பாதுகாப்புத் தூண் (Assessment Vertical) விளக்கம் அதிகபட்ச மதிப்பெண் ரேட்டிங் %
மோதல் பாதுகாப்பு (Crash Protection) மோதலின்போது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு. 114 (Raw) 55%
பலவீனமான சாலைப் பயனர் பாதுகாப்பு (VRU Protection) பாதசாரிகள், டூ-வீலர் ஓட்டுபவர்கள் மீது ஏற்படும் தாக்கம். 56 (Raw) 20%
விபத்து தவிர்ப்பு (Accident Avoidance) ESC, AEB போன்ற தானியங்கி தடுப்பு அமைப்புகள். 25 (Raw) 10%
பாதுகாப்பான ஓட்டுநர் முறை (Safe Driving) சோர்வு எச்சரிக்கை (DDAW), வேகக் கட்டுப்பாடு. 25 (Raw) 10%
விபத்துக்குப் பிந்தைய பாதுகாப்பு (Post-Crash Safety) SOS கால், மீட்பு வசதிகள், தீயை அணைக்கும் வசதி. 20 (Raw) 5%

உண்மையான விபத்து போல எவ்வளவு வேகத்தில் கார் கிராஷ் டெஸ்டில் ஈடுபடுத்தப்படும் தெரியுமா .?

  • 64 km/h Offset Frontal Impact எனப்படுவது காரின் முன்புறம் 40% மட்டும் மோதுப்பட்ட சோதனை செய்யப்பட உள்ளது.
  • 50 km/h Full-Width Frontal Impact எனப்படுவதன் மூலம் முழு முன்புறமும் barrier-ஐ கொண்டு மோதும்
  • 50 km/h Mobile Lateral Barrier Impact பக்கவாட்டு கிராஷ் டெஸ்ட் பொதுவானது.
  • 32 km/h Oblique Pole Side Impact எனப்படுவது மரங்கள் அல்லது எலக்ட்ரிக் கம்பம் போல் ஒரு பக்க மோதல்
  • இறுதியாக, 50 km/h Mobile Rigid Rear Impact எனப்படுவது பின்புறத்தில் நேரடி மோதி பம்பர் டூ பம்பர் போல மோத செய்வதாகும்.

நடைமுறையில் உள்ள கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் செப்டம்பர் 20, 2027 அன்று காலாவதியானவுடன், பாரத் NCAP 2.0 நெறிமுறை அக்டோபர் 2027 முதல் நடைமுறைக்கு வரக்கூடும்.

இந்த மாற்றங்கள், வாகன உற்பத்தியாளர்கள் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய ஊக்குவிப்பதுடன், இந்திய வாடிக்கையாளர்களுக்குச் சாலைப் பாதுகாப்பில் உலகத் தரத்தை அடைவதை உறுதி செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Motor News

பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் அறிமுகமானது

இந்தியாவின் கிராஷ் டெஸ்ட் பாரத் என்சிஏபி அறிமுக தேதி வெளியானது

Bharat NCAP என்றால் என்ன ? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

Tags: Bharat NCAP
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன..!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan