மூன்று பைக்குகளை நீக்கிய ஹீரோ மோட்டோகார்ப்

0

ஹீரோ ஹெச்எஃப் டான் , ஸ்பிளென்டர் ப்ரோ மற்றும் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் என மூன்று மாடல்களை இந்திய சந்தையிலிருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

HeroSplendorProClassic

Google News

ஹீரோ பைக்குகள்

ஹோண்டா நிறுவனத்தின் 97.2 cc எஞ்சின் பொருத்தப்பட்ட  மாடல்களான ஹீரோ ஹெச்எஃப் டான் , ஸ்பிளென்டர் ப்ரோ மற்றும் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் என மூன்று பைக்குகளையும் சந்தையிலிருந்து நீக்கியுள்ளது.

ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கிற்கு மாற்றாக ஹீரோ நிறுவனம் ஐ3எஸ் நுட்பத்தை பெற்ற ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கை கடந்த வருடத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்த நிலையில் ஐஸ்மார்ட் பைக்கை நீக்கியுள்ளது.

hf dawn bike

ஹீரோ நிறுவனத்தின் குறைந்த விலை கொண்ட மாடலாக விளங்கிய ஹெச்எஃப் டான் பைக் மற்றும் கஃபே ரேஸர் வடிவமைப்பை பெற்றிருந்த ஸ்பிளென்டர் ப்ரோ போன்ற மாடல்களின் குறைவான விற்பனை எண்ணிக்கை காரணமாக இந்த மாடல்களையும் நீக்கியுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தினை சார்ந்த செயல்பாடுகளை குறைத்து கொண்டு வருகின்ற ஹீரோ அடுத்த சில மாதங்களில் ஹோண்டாவின் எஞ்சின் உள்பட பலவற்றை முற்றிலும் நீக்க உள்ளது.