Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
May 8, 2018
in செய்திகள்

 

இந்தியாவின் முன்னணி ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கூடுதல் வசதிகளை பெற்ற ஹோண்டா டியோ டீலக்ஸ் ஸ்கூட்டர் வேரியன்ட் மாடலை ரூ. 53,292 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஹோண்டா டியோ

விற்பனையில் உள்ள டியோ ஸ்கூட்டரின் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களையும் பெறாமல் கூடுதல் வசதிகள் மற்றும் நிறத்தை பெற்று ரூ. 3000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ள டியோ டீலக்ஸ் வேரியன்டில் குறிப்பாக எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கன்சோல் மற்றும் இரண்டு மேட் ஃபினிஷ் நிறங்களை பெற்றுள்ளது.

மேலும் தங்க நிறத்தை பெற்ற ரிம், பாடி ஸ்டிக்கரிங் கிராபிக்ஸ், ஹேன்டில் பாரில் எல்இடி ஸ்டீரிப் ஆகியவற்றுடன், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட பச்சை மற்றும் கிரே நிறங்களில் கிடைக்க உள்ளது. இதை தவிர இந்த ஸ்கூட்டர் மாடலில் கிரேஸியா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள இக்னிஷன் அமைப்பில் 4 இடங்களை அன்லாக் செய்யவதற்கான அமைப்பும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ஆக்டிவா 5ஜி மாடலில் இடம்பெற்றுள்ள ஹோண்டா ஈக்கோ டெக்னாலாஜி பெற்ற 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு , 7.8hp ஆற்றல் மற்றும் 8.9Nm டார்க் வழங்குகின்றது. இந்த ஸ்கூட்டரில் இரு டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் சிபிஎஸ் எனப்படுகின்ற காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினரை கவரும் நோக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ள புதிய ஹோண்டா டியோ மாடல், சாதாரண வேரியன்டை விட ரூ.3000 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் உள்ள ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், டிவிஎஸ் வீகோ, யமஹா ரே, மற்றும் சுசூகி லெட்ஸ் ஆகிய மாடல்களைவ எதிர்கொள்ள உள்ளது.

புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை ரூ. 53, 292 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Tags: Honda Motorcycle and Scooter Indiaபுதிய ஹோண்டா டியோஹோண்டா டியோ
Previous Post

மிக விரைவில் சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் பைக் அறிமுகம்

Next Post

மாருதி பலேனோ, ஸ்விஃப்ட் கார்கள் திரும்ப அழைப்பு : பிரேக் பிரச்சனை

Next Post

மாருதி பலேனோ, ஸ்விஃப்ட் கார்கள் திரும்ப அழைப்பு : பிரேக் பிரச்சனை

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version