ஹூண்டாய் டூஸான் ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்..!

0

தென் ஆப்பிரிக்காவில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி அடிப்படையிலான டூஸான் ஸ்போர்ட் எஸ்யூவி கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Hyundai Tucson Sport

டூஸான் ஸ்போர்ட் எஸ்யூவி

சாதாரன மாடலை விட கூடுதலான தோற்ற மாற்றங்களை பெற்ற மாடலாக வந்துள்ள டூஸான் ஸ்போர்ட்டிவ் எஸ்யூவி மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

வெளிப்படுத்தப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் டூஸான் மாடலில் முன்பக்க , பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு அமைப்பு போன்றவற்றில் கூடுதலான கிட்களை பெற்றுள்ள இந்த மாடலில் 19 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. க்ரோம் பூச்சு கொண்ட எக்ஸ்ஹாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

2017 Hyundai Tucson Sport

இசியூ வாயிலாக சாதாரன மாடலை விட 27 ஹெச்பி கூடுதல் பவர் மற்றும் 30 என்எம் கூடுதல் டார்க் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக வந்துள்ள டூஸான் பெட்ரோலில் 201 ஹெச்பி பவர் மற்றும் 295 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் சேர்க்கப்படவில்லை.

ஏபிஎஸ், 6 காற்றுப்பைகள், தானியங்கி சூழ்நிலை கட்டுப்பாடு, செயற்க்கைகோள் தொடர்பு வழிகாட்டி, 8 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு, மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர், பின்புற கேமரா போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

Hyundai Tucson Sport Blue

ஹூண்டாய் டூஸான் ஸ்போர்ட் பற்றி நினைவில் கொள்ள வேண்டியவை

  • தென் ஆப்பிரிக்காவில் ஹூண்டாய் டூசான் ஸ்போர்ட் விற்பனைக்கு வெளியிட்டப்பட்டுள்ளது.
  • கூடுதலான தோற்ற மாறுதல்கள் உள்பட பவரும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா வருகை குறித்து எவ்விதமான தகவலும் இல்லை.

Hyundai Tucson Sport SUV Image Gallery