டெஸ்லா சந்தேகங்களுக்கு தீர்வு தந்த மேக் இன் இந்தியா..!

0

அமெரிக்காவின் பிரபலமான எலக்ட்ரிக்  கார் தயாரிப்பாளரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியா வருகை குறித்தான சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையிலான டிவிட்டை மேக் இன் இந்தியா டிவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.

tesla model 3

Google News

டெஸ்லா இந்தியா

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கார்கள் விற்பனை செய்வது குறித்து டிவிட்டர் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சமீபத்தில் பதில் தந்த டெஸ்லா சிஇஓ அதிகாரி எலான் மஸ்க்  இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களுக்கு 30 சதவிகித பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ப்படும் வகையில் அமைந்திருப்பதால் , என தற்போது இந்தியா சந்தையில் டெஸ்லா அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை, என தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

elon musk twitter tesla india 1

 

இது தவறாக எலான் மஸ்க் அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக மேக் இன் இந்தியா திட்டத்தின் அதிகார்வப்பூர்வ டிவிட்டர் பக்கம் தகவல் வெளியிட்டு அன்னிய நேரடி முதலீடு குறித்து விளக்கத்தையும் எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரில் விளக்கியுள்ளது.

இதில் அன்னிய நேரடி முதலீடு செய்ய விரும்பும் நிறுவனம் இந்தியாவில் எவ்விதமான பாகங்களும் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை 100 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களை விற்பனைக்கு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் ரீடெயில் துறை எனும் சில்லறை வர்த்தகம் சார்ந்த சேவைகளுக்கு மட்டுமே , குறிப்பிட அளவிற்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tesla CEO Elon Musks localisation doubts make in india

டெஸ்லா மாடல் 3 முன்பதிவுக்கு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய சந்தையில் மாடல் 3 இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

வாசகர்களே..! ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின்  மோட்டார் டாக்கீஸ் பகுதியில் உள்நுழைந்த உங்கள் விருப்பமான பகிர்வுகளை  விருப்பம் போல பகிர்ந்து கொள்ளலாம் மேலும்கேள்விகளை பதிவு செய்யலாம்.. உள்நுழைய புதிய கணக்கை தொடங்க இங்கே க்ளிக் செய்க… கட்டுரையை பதிவு செய்வது குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்க..! உள்நுழைவதில் சிரமங்கள் மற்றும் பதிவிடுவதில் சிரமங்கள் ஏற்பட்டால் புகாருக்கு..இங்கே க்ளிக் பன்னுங்க.. –> http://bit.ly/motortalkies