ஜனவரி முதல் மஹிந்திரா கார்கள் விலை உயர்கின்றது

இந்தியாவின் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பிரிவில் உள்ள மஹிந்திரா கார்கள் மற்றும் சிறியரக வர்த்தக வாகனங்கள் போன்றவற்றின் விலையை மகேந்திரா உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி 1, 2017 முதல் அமலுக்கு வருகின்றது.

யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பில் சிறந்த விளங்கும் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் தங்களுடைய எஸ்யூவி மற்றும் கார்களின் விலை ரூ.3000 முதல் அதிகபட்சமாக ரூ.26,500 வரை அதிகரித்துள்ளது. மேலும் மஹிந்திரா சிறிய ரக வர்த்தக பிரிவில் உள்ள அதாவது 3.5 டன் மற்றும் குறைவான டன் எடையுள்ள மாடல்களின் விலையை ரூ. 1500 முதல் அதிகபட்சமாக ரூ.6000 வரை உயர்த்தியுள்ளது.

மஹிந்திரா மாடல்கள்

இதுகுறத்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உயர்ந்து வரும் எரிபொருள் விலையின் காரணமாக வாகனத்தை எடுத்துசெல்லும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதனால் விலை உயர்வினை தவிரக்க இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் கேயூவி100  டியூவி300 , தார் , பொலிரோ , நூவோஸ்போர்ட் , ஸ்கார்ப்பியோ எக்ஸ்யூவி500 ,சைலோ , இம்பேரியோ , பொலிரோ பிக்கப் , சுப்ரோ ,  வெரிட்டோ ,வெரிட்டோ எலக்ட்ரிக் மற்றும் e2o பிளஸ் போன்ற மாடல்களுடன் சாங்யாங் ரெக்ஸ்டான் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. மஹிந்திரா சிறிய ரக வர்த்தக வாகன பிரிவில் ஆல்ஃபோ , சுப்ரோ டிரக் , இ-சுப்ரோ  , ஜீதோ சேம்பர் போன்ற மாடல்களும் சந்தையில் உள்ளது.

 

Recommended For You