விற்பனையில் டாப் 10 எஸ்யுவி கார்கள் – ஜூன் 2016

0

மிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்துவரும் இந்தியாவின் எஸ்யூவி ரக கார் சந்தையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா , ஹூண்டாய் க்ரெட்டா போன்றவை முன்னிலை வகிக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் 5 எஸ்யுவி கார்கள் டாப் 10 எஸ்யுவி கார்கள் ஜூன் 2016 மாத விற்பனை பட்டியலில் உள்ளது.

honda-br-v-suv-car

Google News

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மினி எஸ்யுவி கேயுவி100 3453 கார்கள் டெலிவரி ஆகி வரிசையில் 5வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் மஹிந்திரா பொலிரோ 4வது , ஸ்கார்ப்பியோ 6வது இடம் , மஹிந்திரா எகஸ்யுவி500 8வது இடத்திலும் பட்டியலின் கடைசி இடத்தினை மஹிந்திரா டியூவி300 பெற்றுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா முதல் வருட கொண்டாட்டத்தில் சமீபத்தில் சிறப்பு எடிசனை வெளியிட்டுள்ளது.அடுத்த சில வாரங்களில் டீலர்களிடம் க்ரெட்டா ஆனிவர்சரி சிறப்பு எடிசன் கிடைக்கும். 7700 க்ரெட்டா கார்கள் விற்பனை ஆகி பட்டியலில் முதலிடத்தினை பெற்றுள்ளது.

மிகுந்த சாவிலினை காம்பேக்ட் ரக  எஸ்யுவி கார்களுக்கு ஏற்படுத்தி வரும் இந்தியாவின் முன்னனி தயாரிப்பாளரின் விட்டாரா பிரெஸ்ஸா 6673 கார்களை விற்பனை செய்துள்ளது. ஃபோர்டு ஈகோஸ்போர்ட் சீரான விற்பனையை தொடர்ச்சியாக பதிவு செய்து பட்டியலில் மூன்றாவது இடம்பெற்றுள்ளது.

காம்பேக்ட் ரக பிரிவில் புதிய வரவான ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி 3064 கார்களை விற்பனை செய்து 7வது இடத்திலும் பிரசத்தி பெற்ற ரெனோ டஸ்ட்டர் 9வது இடத்திலும் உள்ளது.

விற்பனையில் டாப் 10 எஸ்யுவி கார்கள் – ஜூன் 2016
வ.எண்   கார் மாடல் விபரம் ஜூன் -2016
1 ஹூண்டாய் க்ரெட்டா 7,700
2  மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா 6,673
3 ஃபோர்டு ஈகோஸ்போர்ட் 4,609
4 மஹிந்திரா பொலிரோ 3,649
5 மஹிந்திரா கேயூவி100 3,543
6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 3,366
7 ஹோண்டா பிஆர்-வி 3,064
8 மஹிந்திரா எக்ஸ்யூவி500 2,288
9 ரெனோ டஸ்ட்டர் 1,945
10 மஹிந்திரா டியூவி300 1,722

mahindra-20scorpio