ஹோண்டா நவி மினிபைக் விற்பனையில் பெரும் வீழ்ச்சி..!

0

ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட முதல் மினி பைக் மாடலான ஹோண்டா நவி மினிபைக் ஆரம்ப கடத்தில் அமோக வரவேற்பினை பெற்றாலும் கடந்த சில மாதங்களாகவே சொற்ப எண்ணிக்கையிலே விற்பனை ஆகி வருகின்றது.

நவி மினிபைக்

2016ல் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நவி மினி பைக் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரின்  டிசைன் தாத்பரியங்களை கொண்டு மிக குறைந்த விலையில் வித்தியாசமான அமைப்பினை பெற்ற மாடலாக வெளியிடப்பட்டது.

Google News

மோட்டோ ஸ்கூட்டர் மாடலில் 7.8 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் காப்புரிமை பெற பெற்ற ஹோண்டா ஈக்கோ டெக்னாலாஜி நுட்பம் பெற்ற என்ஜினாகும். இதில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்வதற்கு சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

honda navi rear

முதல் வருடத்தில் 50,000 விற்பனை இலக்கை நிர்ணயம் செய்திருந்த ஹோண்டா மார்ச் 2017 முடிவில் 60,000 என்ற விற்பனை இலக்கை பெற்று அசத்தியிருந்தது. ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக விற்பனையில் பெரிய அளவிலான எண்ணிக்கை பதிவு செய்ய தடுமாறி வருகின்றது.

விற்பனை பட்டியலின் அட்டவனை கீழே வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நவி சியாம்
ஜனவரி-17 2,052
பிப்ரவரி-17 1,180
மார்ச்-17 503
ஏப்ரல்-17 284

honda navi customised