ஆகஸ்ட் 2020-ல் விற்பனையில் கலக்கிய டாப் 10 கார்கள்

0

2020 Kia Seltos

கோவிட்-19 பரவல் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் படிப்படியாக விற்பனை எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் டாப் 10 கார்கள் பட்டியிலில் மாருதி சுசுகி நிறுவனம் 7 இடங்களை கைப்பற்றியுள்ளது. மற்ற மூன்று இடங்களில் ஹூண்டாய் மற்றும் கியா இடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் கார் விற்பனை எண்ணிக்கையில் 14,869 பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார் இடம் பிடித்துள்ளது. மாருதியை தவிர ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி 11,758 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பட்டியலில் செல்டோஸ் 7வது இடத்தில் உள்ளது.

காம்பேக்ட் ரக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ போன்ற எஸ்யூவிகளில் முதல் 10 இடங்களில் இடம்பிடிக்கவில்லை.

டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் ஆகஸ்ட் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 14,869
2 மாருதி ஆல்டோ 14,397
3 மாருதி வேகன் ஆர் 13,770
4 மாருதி டிசையர் 13,629
5 ஹூண்டாய் கிரெட்டா 11,758
6 மாருதி பலேனோ 10,742
7 கியா செல்டோஸ் 10,655
8 ஹூண்டாய் கிரான்ட் i10 10,190
9 மாருதி எர்டிகா 9,302
10 மாருதி ஈக்கோ 9,115