பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பைக்குகள் விலை உயர்வு

0

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்திய சந்தையில் விற்பனை செய்கின்ற 100சிசி – 400சிசி வரையிலான பைக்குகளின் விலை ரூ.500 முதல் ரூ. 2000 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது. டோமினார் பைக் அதிகபட்சமாக ரூ.2000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ பைக்குகள்

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சமீபத்தில் பஜாஜ் சிடி 100 பைக் மாடலை அதிகபட்சமாக ரூ.6000 வரை விலை குறைத்திருந்த நிலையில், மற்ற மாடல்களை ரூ.500 முதல் ரூ. 2000 வரை உயர்த்தியுள்ளது.

Google News

குறிப்பாக இந்நிறுவனத்தின் பஜாஜ் டோமினார் 400 பைக் விலை அதிகபட்சமாக ரூ.2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்சர் ஆர்200 பைக் விலை ரூ.1800 வரையும், பல்சர் என்எஸ் 200 பைக் ரூ.1700 வரை உயர்வைடைந்துள்ளது. மேலும் அவென்ஜர் 220 க்ரூஸர் பைக் ரூ.1000 மற்றும் அவென்ஜர் 180 பைக் ரூ.1100 உயர்த்தப்பட்டுள்ளது.

பஜாஜ் வி12 பைக் விலையில் மாற்றமில்லால், வி15 பைக்கின் விலை ரூ.1000 உயர்த்தப்பட்டு, டிஸ்கவர் 125 மாடல் ரூ.500 முதல் ரூ.1000 என விலை உயர்த்தப்பட்டிருப்பதுடன், பிளாட்டினா மாடல் ரூ.500 உயர்ந்துள்ளது.