ஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

Husqvarna-Svartpilen-401

2019 நவம்பர் மாதத்திற்கு முன்னதாக ஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக் மாடல்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹஸ்க்வர்னா பைக்குகள் நீண்ட காலமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதத்துக்கு முன்பாக விற்பனைக்கு வெளியிடப்படும் என பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் பஜாஜ் ஆட்டோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டான அர்பனைட் இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியாக உள்ளது.

அதேபோல பஜாஜின் 2019 டோமினார் 400 மற்றும் அவெஞ்சர் வரிசை மாடல்கள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தப்படியாக சிடி 100 மற்றும் பிளாட்டினா போன்ற மாடல்கள் புதுப்பிக்கப்பட உள்ளது. மேலும் பிரபலமான பல்சர் வரிசை மாடல்கள் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு கிடைக்கலாம்.

பிரசத்தி பெற்ற கேடிஎம் ஸ்போர்ட்டிவ் பைக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுவீடன் நாட்டின் ஹஸ்க்வர்னா பைக் மாடல்களை இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வெளியிட பஜாஜ் திட்டமிட்டுள்ளது.