பஜாஜ் ஆட்டோ விற்பனை 18 சதவீத வளர்ச்சி

0

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுப்படு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த டிசம்பர் 2018 யில் டூ வீலர் மற்றும் வர்த்தக வாகன மொத்த விற்பனை 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து  3,46,199 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

பஜாஜ் நிறுவனம் மோட்டார்சைக்கிள் விற்பனையில் 31 சதவீத வளர்ச்சியை கடந்த டிசம்பர் 2018யில் பெற்றுள்ளது. முந்தைய 2017 டிசம்பரில் சுமார்  2,28,762 யூனிட்டுகள் விற்றிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 2018 யில் 2,98,855 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவு சுமார் 26 சதவீதம் சரிவைடைந்து 47,344 யூனிட்டுகள் டிசம்பர் 2018யில் விற்பனை செய்துள்ளது. முந்தைய 2017 டிசம்பரில் 63,785 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

பஜாஜ் விரைவில் பல்சர் சீரிஸ், அவென்ஜர் ஆகிய மாடல்களில் இடம்பெற்றுள்ள 125சிசி க்கு மேற்பட்ட பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்ட மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளது.