சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மீதான ஜிஎஸ்டி வரி உயருகின்றது

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் ஆட்டோமொபைல் சார்ந்த பிரிவுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் செஸ் வரியாக சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க மத்திய அமைச்சரவை இன்று, ஒப்புதல் அளித்துள்ளது.

ஜிஎஸ்டி எஸ்யூவி வரி உயர்வு

ஆடம்பர சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு முந்தைய வரி விதிப்பில் 55 சதவீதமாக இருந்த நிலையில் ஜிஎஸ்டிக்கு பிறகு 43 சதவீதமாக குறைந்த நிலையில் லட்சங்கள் முதல் கோடிகள் வரை கார்கள் மற்றும் எஸ்யூவி விலை குறைந்தது.

தற்போது, ஜிஎஸ்டி வரி வதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்.யூ.வி மாடல்களுக்கு 43 சதவீதமாக இருக்கும் நிலையில் , எனவே செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதால், விரைவில் எஸ்யூவி மற்றும் சொகுசு கார்கள் விலை லட்சங்கள் அதிகரிக்கும் என்பதனால் ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யுவி மாடல்களை வாங்குவதற்கு இதுவே சரியான தருணமாகும்.

மேலும் படிங்க – ஆட்டோமொபைல் ஜிஎஸ்டி சிறப்பு கட்டுரை

எனவே, புதிதாக வரவுள்ள இந்த வரி விதிப்பால், எஸ்.யூ.வி மற்றும் அனைத்து ஆடம்பர சொகுசு கார்களும் 28 சதவிகதம் வரி மற்றும் கூடுதலாக 25 சதவிதம் செஸ் வரியை பெறும். இதன் காரணமாக விரைவில் எஸ்.யூ.வி கார் அல்லது ஆடம்பர சொகுசு கார்களுக்கு, இனி மொத்தமாக நீங்கள் 53 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுவார்கள்.

Recommended For You