செப்., 2019-யில் 21 % வீழ்ச்சி அடைந்த மஹிந்திரா கார் விற்பனை நிலவரம்

மஹிந்திரா பொலிரோ கேம்பர்

மஹிந்திரா & மஹிந்திரா கார் தயாரிப்பாளரின் உள்நாட்டு சந்தையிலும் 21 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2019 செப்டம்பர் மாதத்தில் 40,692 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 51,268 வாகனங்கள் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திராவின் விற்பனை வீழ்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. இந்நிறுவனம் கடந்த மாதம் மொத்தமாக 21 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இது செப்டம்பர் 2018  விற்கப்பட்ட 55,022 உடன் ஒப்பீடும்போது, 43,343 யூனிட்டுகள் மட்டும் 2019 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் ஏற்றுமதியும் சந்தையை செப்டம்பர் 2018-யில் 3754 யூனிட்டுகள் பதிவு செய்திருந்த நிலையில் செப்டம்பர் 2019-ல் 29 சதவீதம் சரிவை பதிவு செய்து 2651 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

மஹிந்திராவின் பயணிகள் வாகனங்கள் பிரிவில், செப்டம்பர் 2018-யில் 21,411 வாகனங்களுடன் ஒப்பிடும்போது, 2019 செப்டம்பரில் 14,333 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

வர்த்தக வாகனங்கள் பிரிவில், இந்நிறுவனம் கடந்த மாதம் 18,872 விற்பனை செய்யப்படது. ஆனால், அதேவளை 2018 செப்டம்பரில் விற்கப்பட்ட 22,917 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது.

நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களில் இந்த பிரிவில், 62 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மாதம் 408 வாகனங்களை விற்றுள்ளது, கடந்த ஆண்டு விற்கப்பட்ட எண்ணிக்கை 1064 ஆகும்.