அடுத்த 6 மாதங்களில் மஹிந்திரா KUV100 நெக்ஸ்ட் மினி எஸ்யூவி மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

மஹிந்திரா KUV100 நெக்ஸ்ட் ஏஎம்டி

அடுத்த வருடத்தின் மத்தியில் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆட்டோமொபைல் துறை, தலைவர் ராஜன் வதேரா தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட புதிய மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் கார் 40 விதமான மாறுதல்களுடன் மேம்பட்ட எஞ்சின்களை கொண்டதாக ரூ.4.43 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்க நிலை சந்தையில் விற்பனையில் உள்ள ஆல்டோ கே10, ரெனோ க்விட், செலேரியோ ஏஎம்டி, டியாகோ ஏஎம்டி ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் டியூவி300 காரில் இடம்பெற்றுள்ள அதே ஏஎம்டி மாடல் கேயூவி100 காரிலும் இடம்பெற வாய்ப்புள்ளது.

தற்போது கேயூவி100 மாடலில் 1.2 லிட்டர் எம்-ஃபால்கான் வரிசை பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 77 bhp குதிரை திறன் மற்றும் 190 Nm டார்க் வழங்கும் D75 டீசல் எஞ்சின் பெற்றுள்ளது. 82 bhp குதிரை திறன் மற்றும் 115 Nm டார்க் வழங்கும் G80 பெட்ரோல் எஞ்சின் பெற்றுள்ளது.

இதுதவிர இந்த மாடலின் அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் கேயூவி100 எஸ்யூவி 2019 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரலாம்.