மஹிந்திரா அமெரிக்காஉலகின் மிகப்பெரிய மோட்டார் சிட்டி என அறியப்படுகின்ற அமெரிக்கா நாட்டின் டெட்ராயட் நகரில் முதல் உற்பத்தி தொழிற்சாலையை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தொடங்கியுள்ளது.

மஹிந்திரா ரோக்ஸோர்

மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வட அமெரிக்கா  ( Mahindra Automotive North America – MANA) என்ற பெயரில் புதிய உற்பத்தி தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய மோட்டார் சிட்டி என அழைக்கப்படுகின்ற டெட்ராயட் நகரின் 25 ஆண்டுகளில் அமைந்த முதல் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகின்றது.

வட அமெரிக்கா தொழிற்சாலையில் ஆஃப்ரோடு சாலையில் பயணிக்க ஏற்ற ரோக்ஸோர் என்ற மாடலை 2018 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

கடந்த 2013 வடஅமெரிக்கா தொழிற்சாலைக்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடர்ந்த மஹிந்திரா நிறுவனம் இந்த மையத்தில் டிசைனிங் உட்பட ஆட்டோமோட்டிவ் சார்ந்த அனைத்து மேம்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் $230 மில்லியன் (ரூ.1,452 கோடி ) முதலீட்டில் 400,000 சதுர அடியில் தொடங்கப்பட்டுள்ளது.

ரோக்ஸோர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஆஃப்ரோடு வாகனம் சாலை அல்லாத இடங்களிலும், விவசாயம் சார்ந்த தேவைகளுக்கு பூர்த்தி செய்யும் வகையிலான வாகனமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெட்டராய்ட் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா ஆலையில் எதிர்கால ஆட்டோமொபைல் உலகின் அங்கமாக மாற உள்ள தானியங்கி கார், டிரக் மற்றும் டிராக்டர் ஆகியவற்றின் ஆராய்ச்சி மற்றும மேம்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.