36 % வீழ்ச்சி அடைந்த மாருதி சுசூகி கார் விற்பனை ஆகஸ்ட் 2019

xl6

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவன வாகன விற்பனை 36 % வீழ்ச்சி ஆகஸ்ட் 2019-ல் பதிவு செய்த இந்த ஆண்டின் மிக குறைந்த மாதந்திர விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம், சூப்பர் கேரி டிரக் உட்பட மொத்தமாக 94,728 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,47,700 ஆக இருந்தது.

யுட்டிலிட்டி ரக வாகனங்களுக்கு சந்தை மட்டும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்எல் 6  கார் உட்பட எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ் மற்றும் ஜிப்ஸி என மொத்தமாக 18,522 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 17,971 வாகனங்கள் மட்டும் விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 3.1 சதவீத வீழ்ச்சியாகும்.

ஆனால், இந்நிறுவனத்தின் ஆல்டோ, உட்பட டிசையர் பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் போன்ற கார்களின் விற்பனை எண்ணிக்கை மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உள்நாட்டு விற்பனை மட்டுமல்ல இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 10.8 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2018-ல் உள்நாடு மற்றும் ஏற்றுமதி என மொத்தமாக இந்நிறுவனம், 1,58,189 யூனிட்டுகளை விற்றிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 2019-ல் 106,413 வாகனங்களை மட்டும் விற்பனை செய்துள்ளது. இது 32.7 சதவீத ஒட்டுமொத்த விற்பனை வீழ்ச்சி ஆகும்.

Exit mobile version