டாடா மோட்டார்சின் டீகோர் மின்சார கார் உற்பத்தி துவங்கியது

0

Tata Tigor EV first batch rolled outஇந்தியாவின் டாடா மோட்டார்ஸ் மின்சார கார் தயாரிப்பில் களமிறங்கியுள்ள நிலையில், முதல் டாடா டீகோர் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை ரத்தன் டாடா மற்றும் டாடா குழும தலைவர் N. சந்திரசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

டாடா டீகோர் EV

Tata Tigor EV first batch rolled out from Sanand plant

Google News

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள டாடாவின் நானோ சனந்த தொழிற்சாலையில் டீகோர் கார் அடிப்படையிலான மின்சார கார் உற்பத்தியை டாடா குழும சேர்மேன் என். சந்திரசேகரன் மற்றும் ரத்தன் டாடா ஆகியோர் உற்பத்தியை துவக்கி வைத்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் மத்திய அரசின் EESL துறையின் முதற்கட்ட ஏலத்தில் 10,000 மின்சார கார்களுக்கான ஆர்டரை டாடா வென்றிருந்தது.

முதற்கட்டமாக தயாரிக்கப்பட உள்ள 250 மின்சார கார்கள் மத்திய அரசுத் துறை பயன்பாடுகளுக்காக EECL நிறுவனத்திடம் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளன. பின்னர், படிப்படியாக மீதமுள்ள 9,750 கார்களையும் டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த மின்சார காரின் அதிகார்வப்பூர்வ நுட்ப விபரங்கள் அறிவிக்கப்படவில்லை, சமீபத்தில் கசிந்த தகவலின் அடிப்படையில் எலக்ட்ரா EV நிறுவனத்தின் மின்சார மோட்டார் மற்றும் பவர்ட்ரெயின் 29.8 kW (39.95 hp) ஆற்றலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அரசின் பயன்பாட்டிற்கான 10,000 கார்கள் டெலிவரி நிறைவு பெற்ற உடன் தனிநபர் பயன்பாட்டிற்க்கும் டீகோர் மின்சார கார் விற்பனை செய்யப்பட உள்ளது.