7 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்த நிசான் இந்தியா

0

கடந்ந 2005 ம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும்  நிசான் இந்தியா நிறுவனம் 106 நாடுகளுக்கு 7 லட்சம் வாகனங்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 7 லட்சம் வாகனங்களை எண்ணூர் துறைமுகத்தின் வாயிலாக ஏற்றுமதி செய்துள்ளது.

datsun redigo

நிசான் இந்தியா

 

2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள ரெனோ-நிசான் கூட்டு ஆலையில் தயாரிக்கப்படுகின்ற இந்திய தயாரிப்பு நிசான் கார்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம் என அழைக்கப்படுகின்ற  எண்ணூர் துறைமுகத்திலிருந்து 106 நாடுகளுக்கு  நிசான் மற்றும் டட்சன் கார்களை ஏற்றுமதி செய்ப்படுகின்றது.

முழுதாக வடிவமைக்கப்பட்ட கார்கள் தவிர 2500க்கு மேற்பட்ட உதிரிபாகங்களும் 18 நாடுகளில் அமைந்துள்ள 25க்கு மேற்பட்ட  ரெனோ-நிசான் கூட்டு ஆலைகளுக்கு அனுப்படுவதாக டட்சன் தெரிவித்துள்ளது.

nissan export chart

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற டட்சன் ரெடி-கோ, கோ ,கோ பிளஸ் போன்றவற்றுடன் நிசான் சன்னி , மைக்ரா போன்ற கார் மிக முக்கியமானவையாகும். காமராஜர் துறைமுகத்திலிருந்து  ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தின் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் ஆசிய மற்றும் ஆப்பரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

nissan micra facelift