இந்தியாவில் முதல் சீன மோட்டார் நிறுவனம் : எம்ஜி மோட்டார்

0

இந்திய சந்தையில் ஜப்பான்,ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முதல் சீன ஆட்டோமொபைல் நிறுவனமாக எஸ்ஏஐசி (SAIC) குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்தின் எம்ஜி மோட்டார் (MG Motor India) நிறுவனம் களமிறங்க உள்ளது.

2016 MG Gs

Google News

எம்ஜி மோட்டார்

இந்தியாவிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜிஎம் செவர்லே வெளியேறினாலும் அதனுடைய சீன கூட்டாளி நிறுவனமான எஸ்ஏஐசி (SAIC) குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வாயிலாக தனது செயல்பாட்டை தொடங்க உள்ளது.

2016 MG Gs

சீனாவைச் சேர்ந்த சாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்ட்ஸ்டிரி கார்ப்ரேஷன் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற பிரிட்டிஷ் நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனா உள்பட இங்கிலாந்து போன்ற நாடுகளில் க்ராஸ்ஓவர் ரக கார்கள், செடான், ஹேட்ச்பேக், மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றது.

ஜிஎம் நிறுவனத்தால் கைவிடப்பட்ட குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹாலோல் ஆலையை கையகப்படுத்தும் நோக்கில் உள்ள இந்நிறுவனம்,இந்த ஆலையில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

2016 MG Gs suv

ஆரம்பகட்டத்தில் எஸ்யூவி ரக மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் முதல் மாடல் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் இந்தியா பிரிவு தலைவராக முன்னாள் ஜிஎம் இந்தியாவின் தலைமை அதிகாரி ராஜீவ் சாபா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எக்ஸ்கூட்டிவ் இயக்குநராக முன்னாள் ஜிஎம் டைரக்டர் பி. பலேந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.

MG GS side

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜிஎம் தொழிற்சாலையை இந்நிறுவனம் கையகப்படுத்தியுடன் ரூ. 3000 கோடி வரை முதலீட்டை மேற்க்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது தகவல் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

MG GS side rear

MG Motor என்றால் Morris Garages மோர்ரீஸ் காரேஜ்ஸ் ஆகும்.