Automobile Tamil

டாடா மோட்டார்ஸ் கைப்பற்றிய 10,000 எலக்ட்ரிக் கார் ஆர்டர் – மத்திய அரசு

நாட்டின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பாக 10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா பெற்றுள்ளது.

டாடா எலக்ட்ரிக் கார்

எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு தேவை நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதனால் மத்திய அரசின் சார்பாக செயல்படும் Energy Efficiency Services Ltd கீழ் 10 ஆயிரம் மின்சார கார்களை விற்பனை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மஹிந்திரா, டாடா மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே மின்சார கார்களை டெலிவரி செய்ய விண்ணப்பத்திருந்த நிலையில் நிசான் நிறுவனம் மின்சார காரின் நுட்ப விபரங்களை வழங்காத காரணத்தால் நிசான் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களுக்கு இடையே நிலவிய மிக கடுமையான போட்டியின் முடிவில் டாடா மோட்டார்ஸ் 10,000 கார்களை ரூ.1120 கோடி மதிப்பீட்டில் கைப்பற்றியுள்ளது.

மஹிந்திரா-வை விட டாடா நிறுவனம் ஒரு காருக்கு ஜிஎஸ்டி வரியில்லாமல் ரூ.10.16 லட்சமாக விலையை நிர்ணயம் செய்திருந்த நிலையில் ஜிஎஸ்டி வரி உட்பட 5 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் சேர்த்து ஒரு மின்சார காரை ரூ.11. 20 லட்சம் என்ற விலையில் டாடா கோரியதை தொடர்ந்து 10 ஆயிரம் கார்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளது.

முதற்கட்டமாக வரும் நவம்பர் மாதத்தில் 500 மின்சார கார்களும், அடுத்த கட்டமாக 9 ஆயிரக்கு 500 கார்களும் சப்ளை செய்யப்பட உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய மின்சார கார்களுக்கான ஆர்டராக இது கருதப்படுகின்றது.

Exit mobile version