2018 ஆம் ஆண்டின் டாப் 10 ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

0

2019 Maruti Ertiga Price

இந்திய மோட்டார் சந்தையில் , 2018 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான வளர்ச்சியை சில முன்னணி மோட்டார் நிறுவனங்களும் , சில நிறுவனங்கள் சரிவையும் சந்தித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் டாப் 10 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பட்டியலை காணலாம்.

டாப் 10 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் – 2018

இந்திய பயணிகள் வாகன சந்தையில் முதல் 10 இடங்களில் உள்ள மோட்டார் நிறுவனங்கள் மொத்த சந்தையின் பங்களிப்பில் 98 சதவீதம் கொண்டுள்ளது.  2017 ஆம் ஆண்டை விட கார் விற்பனை 2.7 சதவீதம் அதிகரித்து மொத்தமாக 33 லட்சத்துக்கு கூடுதலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

04 04 Aug Kwid 03

நாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி , முந்தையை 2017 ஆம் ஆண்டை விட 7.8 சதவீதம் கூடுதல் வளர்ச்சி கண்டு 17,25,050 யூனிட்டுகளை 2018-ல் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.

இரண்டாமிடத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனம், முந்தைய 2017 ஆம் ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் கூடுதல் வளர்ச்சி பெற்று 5,54,177 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

டாப் 10 பட்டியல்களில் மிகப்பெரிய விற்பனை வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. சுமார் 27.7 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,16,986 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டில் 1,69,841 வாகனங்களை விற்றிருந்தது.

2018 Hyundai Creta Front

இதனை தொடர்ந்து இரண்டாவது மிகப்பெரிய வளர்ச்சி ஃபோர்டு மோட்டார்ஸ் பெற்றுள்ளது. சுமார் 16.5 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,02,079 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டில் 87,587 வாகனங்களை விற்றிருந்தது.

டாப் 10 வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ரெனோ இந்தியா 28.3 சதவீத சரிவை கண்டுள்ளது. ரெனோ க்விட் காரின் தொடர் விற்பனை சரிவினால் ரெனோ மிகவும் பின்தங்கியுள்ளது. சுமார் 28.3 சதவீதம் வீழ்ச்சி பெற்று 81,360 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டில் 1,12,492 வாகனங்களை விற்றிருந்தது.

2018 Volkwagen Vento Front

வீழ்ச்சி அடைந்த நிறுவனங்களில் வோக்ஸ்வேகன் 22.4 சதவீத சரிவை கண்டுள்ளது. சுமார் 22.5 சதவீதம் வீழ்ச்சி பெற்று 37,006 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டில் 47,796 வாகனங்களை விற்றிருந்தது

வ.எண் தயாரிப்பாளர் 2018 2017 மாற்றம்
1. மாருதி சுஸூகி 17,25,050 16,02,522 7.6
2. ஹூண்டாய் 5,54,177 5,27,320 5
3. மஹிந்திரா 2,39,954 2,30,219 4.5
4. டாடா 2,16,986 1,69,841 27.7
5. ஹோண்டா 1,78,778 1,79,071 -2.3
6. டொயோட்டா 1,50,853 1,37,976 9.3
7. ஃபோர்டு 1,02,079 87,587 16.5
8. ரெனால்ட் 81,360 1,12,492 -28.3
9. வோக்ஸ்வேகன் 37,006 47,796 -22.5
10. டட்சன் 34,904 40,443 -13.7