விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – மார்ச் 2020

0

hero splendor ismart 1

மார்ச் மாத இறுதி நாட்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்நிலையில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய இரு சக்கர வாகனங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

Google News

இந்தியாவில் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாகவே மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்த நிலையில் லாக் டவுனை தொடர்ந்து நாட்டின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பாதிப்படைய துவங்கியது. அதிகபட்சமாக ஹீரோ ஸ்ப்ளெண்டர் விற்பனை எண்ணிக்கை 1,43,736 ஆக பதிவு செய்துள்ளது. ஆனால் இதே மாதத்தில் கடந்த ஆண்டு 2,46,656 எண்ணிக்கை பதிவு செய்திருந்தது.

இரு சக்கர வாகன சந்தையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்த ஹோண்டா ஆக்டிவா விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மார்ச் 2020-ல் 1,14,757 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஹோண்டா சிபி ஷைன் விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 190.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஆக்டிவா 6ஜி

டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – மார்ச் 2020

வ.எண் தயாரிப்பாளர் மார்ச் 2020
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 143,736
2. ஹீரோ HF டீலக்ஸ் 114,969
3. ஹோண்டா ஆக்டிவா 114,757
4. ஹோண்டா ஷைன் 86,633
5. டிவிஎஸ் XL சூப்பர் 32,808
6. ஹோண்டா டியோ 29,528
7. சுசூகி ஆக்செஸ் 26,476
8. பஜாஜ் பல்ஸர் 24,305
9. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 24,253
10. டிவிஎஸ் அப்பாச்சி 21,764