டொயோட்டா, சுசூகி2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷன் மற்றும் சுசூகி மோட்டார் கார்ப்ரேஷன் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து மின்சார கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா, சுசூகி கூட்டணி

டொயோட்டா, சுசூகி

ஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இரு மோட்டார் நிறுவனங்களும் இந்திய சந்தையில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சுசூகி நிறுவனம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும், இதற்கான தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை டொயோட்டா வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுசுகி நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதுடன் சந்தைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளும் , டொயோட்டா நிறுவனம் மின்சார கார்களை தயாரிப்பதற்கான தொழிற்நுட்பங்கள் மற்றும் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் திறன் கொண்ட நுட்பங்களை உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

கார் பேட்டரிகள் மட்டுமின்றி, மின்சார மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் போன்ற அனைத்தும் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் விலை மிகவும் சவாலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற 2030 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என மத்திய அரசு மிக தீவரமான செயல் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.