விபத்தில் சிக்கிய கௌரவ் கில் INRC 2019யில் நடந்த சோகம்

0

mahindra super xuv300

இந்தியாவின் அர்ஜூனா விருது வென்ற முதல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரரான கௌரவ் கில் INRC 2019யின் மூன்றாவது சுற்றில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் இவரது கார் மோதியதில் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். கௌரவ் கில் மற்றும் அவருடைய இணை ஓட்டுநர் மூசா ஷெரீப் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் காரணமாக INRC 2019 ரத்து செய்யப்பட்டுள்ளது.

Google News

ஜோத்பூரில் நடந்த மூன்றாவது சுற்றின் முதல் ஸ்டேஜில் (Maxperience ) கௌரவ் கில் இறுதிக் கோட்டை எட்டுவதற்கு 100-150 மீட்டர் தொலைவிற்குள் ஏற்பட்ட விபத்தில் 150 கிமீ வேகத்தில் பயணித்த மஹிந்திரா சூப்பர் எக்ஸ்யூவி 300 ரேலி கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். முற்றிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டிருந்த பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். பேரிக்கார்டுகள் மற்றும் செக்யூரிட்டி எச்சரித்தும் கேளாமல் சாலையைக் கடந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த 24 மணி நேரமாக உடல்களை பெறுவதனை தவிர்த்து உறவினர்கள் போராடிய காரணத்தால், மஹிந்திரா, எம்.ஆர்.எஃப் டயர், ஜே.கே டயர் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா கூடுதலாக கௌரவ் கில் மற்றும் அவரது இணை ஓட்டுநர் மூசா ஷெரீப் ஆகியோருக்கு எதிராக பிரிவு 304 ன் கீழ் குற்றமற்ற கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.