யாரும் அறிந்திராத ஆட்டோமொபைல் சுவாரஸ்யங்கள்…!

0

வாகன துறை வரலாற்றில் மிகவும் ஆச்சரியமான நிகழ்வுகளை பற்றி யாரும் அதிகம் அறிந்திராத உலக ஆட்டோமொபைல் சுவாரஸ்யங்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.  முதல் காரிலிருந்து என தொடங்கி முதல் விபத்து என பலவற்றை அறியலாம் வாருங்கள்..!

world first car Benz

Google News

முதல் கார்

 • நீராவி முலம் இயங்கும் ஆட்டோமொபைல் டிராலி 1768 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.
 • 1807ம் ஆண்டு முதல் ஐசி என்ஜின் வாகனம் அதாவது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனம் உருவாக்கப்பட்டது.
 • 1886 ஆம் ஆண்டு உலகின் முதல் ஆட்டோமொபைல் பெட்ரோல் கார் காரல் பென்ஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது(automobiletamilan).
 • 1888 ஆம் ஆண்டு உலகின் முதல் எலக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டது.

முதல் ரேஸ்

முதல் ஆட்டோமொபைல் ரேஸ் 1895ம் ஆண்டில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்றது. இதில் சார்லஸ் டீயூரியோ வெற்றி பெற்றார். இவரின் சராசரி வேகம் மணிக்கு 11கிமீ ஆகும். 87 கிமீ தூரத்தினை 7 மணி நேரம் 53 நிமிடங்களில் கடந்துள்ளார்.

old race

முதல் விபத்து

 • 1769 ஆம் ஆண்டு முதல் வாகன விபத்து நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

old accident

முதல் உயிரிழப்பு

1896ம் ஆண்டு நடந்த முதல் சாலை விபத்தின்பொழுது சர்ரே என்ற பெண்மணி உயிரழந்தார். இவர் சாலையை கடக்கும்பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. 1899ம் ஆண்டு காரில் பயணித்தவர் உயிரிழந்தார்.(automobiletamilan)

அதிக வருடம்

1928ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் ரோட்ஸ்டார் காரை அலென் ஸ்விஃப்ட் என்பவர் 82 வருடங்களாக ஓட்டியுள்ளார். இதுவரை தயாரிக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் 75 சதவீத கார்கள் இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன.

m allen swift with his 1928 rolls royce phantom

குள்ளமான கார்

உலகின் மிக உயரம் குறைவான காரை பெர்ரி வாட்கின்ஸ் என்பவர் பிளாட்மொபைல் என்ற பெயரில் வடிவமைத்துள்ளார். பிளாட்மொபைல் உயரம் வெறும் 19 இஞ்ச் மட்டுமே.

flatmobile car

புரட்சி கார்

உலகின் புரட்சிகரமான கார் மாடல் என்றால் அது ஃபோர்ட் மாடல் டி கார்தான் ஹென்ரி ஃபோர்டு அவர்களால் வடிவமைக்கப்பட்ட மாடல் டி 1916ம் ஆண்டில் உலகில் விற்பனையான மொத்த கார்களில் 55 சதவீத பங்கினை பெற்றிருந்தது. இதுவரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.

Ford model fifteen million

தடை
 • சிவப்பு நிற கார்களை சீனாவின் சாங்காய் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.
 • இங்கிலாந்தில் நிற்கும் கார்களில் ஹார்ன் அடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் 30 பவுண்ட் அபாரதம் வசூலிக்கப்படும்.
 • அழுக்கான காரை ரஷ்யா சாலைகளில் இயக்கினால் சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.
 • சுவிஸ் நாட்டில் கார் கதவுகளை படாரென சத்தத்துடன் மூடினால் தண்டனைக்குரியதாகும்.

பயணம்

 • நிலவுக்கு பூமியிலிருந்து 96கிமீ வேகத்தில் நில்லாமல் பயணித்தால் 6 மாதங்களில் நிலவை சென்றடையலாம்.
 • பூமியிலிருந்து சூரியனுக்கு பாதையிருந்து காரில் பயணித்தால் 150 வருடங்களில் சென்றடைய முடியுமாம்.

எண்கள்

 • உலகில் ஒரு நாளைக்கு 1,65,000 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.
 • உலகில் எந்த நேரத்திலும் 1 பில்லியன் கார்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.
 • சராசரியாக ஒரு காரில் 30,000 பாகங்கள் உள்ளன.
 • உலகின் முதன்மையான டொயோட்டா கார் நிறுவனம் ஒரு நாளில் 13,000 கார்கள் உற்பத்தி செய்கின்றது.
 • ஃபெராரி சூப்பர் கார் நிறுவனம் ஒரு நாளைக்கு 14 கார்களை உற்பத்தி செய்கின்றது.
 • காரின் உள்ளே நறுமனம் வருவதற்க்காக 50 விதமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றது.

innova

For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan