கவாஸாகி-பஜாஜ் ப்ரோபைக்கிங் கூட்டணி நிறைவுக்கு வருகின்றது

பஜாஜ் ப்ரோபைக்கிங் ஷோரூம் வழியாக ஏப்ரல் 1 முதல் கவாஸாகி பைக்குகள் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி கவாஸாகி சூப்பர் பைக்குகள் தனியான டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

2017 Kawasaki Ninja 300 side

கவாஸாகி-பஜாஜ்

  • கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கவாஸாகி பிரிமியம் பைக்குகள் பஜாஜ் ப்ரோ பைக்கிங் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது.
  • இனி புரோ பைக்கிங் ஷோரூம்களில் கேடிஎம் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
  • ஆனால் கவாஸாகி மற்றும் ஆட்டோ கூட்டணி தொடரும்.

கவாஸாகி மோட்டார் சைக்கிள்கள் பஜாஜ் ப்ரோ பைக் ஷோரூம் வழியாக இனி விற்பனை மற்றும் சர்வீஸ் போன்றவை மட்டுமே செய்யப்படாது. ஆனால் பஜாஜ் மற்றும் கவாஸாகி நிறுவனங்களின் கூட்டணியில் உள்ள நடைமுறையில் உள்ள செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பொருட்கள் போன்றவற்றில் கூட்டணி தொடரும் என புரோ பைக்கிங் பிரிவு தலைவர் அமித் நந்தி தெரிவித்துள்ளார்.

2017 Kawasaki Ninja 300

கவாஸாகி உடனான கூட்டணி பஜாஜ் நிறுவனத்துக்கு 1980 களின் மத்தியில் தொடங்கியதாகும். அதாவது ஹீரோ-ஹோண்டா , டிவிஎஸ்-சுசூகி மற்றும் எஸ்கார்ட்-யமஹா போன்ற கூட்டணிகளை போன்ற இந்த கூட்டணியும் அமைந்தது. பஜாஜ்-கவாஸாகி கூட்டணியில் முதல் மாடலாக 1986 ஆம் ஆண்டில் KB125 பைக் தயாரிக்கப்பட்டது.

இனி புரோ பைக்கிங் ஷோரூம்களில் கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் வரிசை பைக்குகள் மட்டுமே விற்பனை மற்றும் சர்வீஸ் போன்ற சேவைகளை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. கேடிஎம் நிறுவனத்தின்48 சதவீத பங்குகளை பஜாஜ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.

2017 Kawasaki Z650

2017 Kawasaki Ninja 650 kawasaki z900 bike