இந்தியாவில் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் கியா நிறுவன கார்களுக்கு ரூ.48,513 முதல் அதிகபட்சமாக ரூ.4,48,542 வரை விலை குறைய உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நாட்டின் பல்வேறு வாகன தயாரிப்பாளர்களும் விலை குறைப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், கியா சொனெட் மாடலுக்கு ரூ.1,64,471 வரையும், செல்டோஸ் மாடலுக்கு ரூ.75,372 வரை அதிகபட்ச விலை குறைக்கப்பட உள்ளது.
கூடுதலாக இந்நிறுவனத்தின் பிரீமியம் எம்பிவி கார்னிவல் ரூ.4,48,542 ஆகவும், காரன்ஸ் விலை ரூ.48513 வரை மற்றும் கிளாவிஸ் விலை ரூ. 78,674 வரை குறைய உள்ளதாக தெரிவித்துள்ளது. சிரோஸ் மாடலுக்கு ரூ.1.86 லட்சம் வரை குறைக்கப்பட உள்ளது.
Model | Price Reduction up to INR |
---|---|
Sonet | ₹ 1,64,471 |
Syros | ₹ 1,86,003 |
Seltos | ₹ 75,372 |
Carens | ₹ 48,513 |
Carens Clavis | ₹ 78,674 |
Carnival | ₹ 4,48,542 |
ஒரு சில நிறுவனங்கள் உடனடியாக விலை குறைப்பு சலுகையை செற்படுத்தி வரும் நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளன.