ஆஸ்திரியா நாட்டின் ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் தனது 390 டியூக் பைக்கினை அடிப்படையாக கொண்டு மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பைக்கை சோதனை செய்து வருவதற்கான உளவு படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

கேடிஎம் டியூக் மின்சார பைக்

சர்வதேச அளவில் பிரபலமாக விளங்குகின்ற ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் முந்தைய தலைமுறை டியூக் 390 பைக்கை அடிப்படையாக கொண்ட எலக்ட்ரிக் பைக்கின் சோதனை ஓட்ட படங்களின் வாயிலாக விரைவில் டியூக் வரிசையில் தொடக்கநிலை மின்சார பைக்குகளை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

சோதிக்கப்பட்டு வருகின்ற டியூக் 390 பைக்கில் கிளட்ச் லிவர் மற்றும் கியர் ஷிஃப்டர் போன்றவை இடம்பெற்றிருக்கின்றது. எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் பகுதியில் பேட்டரி மற்றும் மின்சார மோட்டார் போன்றவை இடம்பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள டியூக் 390 பைக்கிற்கு இணையான பவரை வெளிப்படுத்தலாம் என உறுதியாக நம்பும் வகையில் மோட்டாரை குளிர்விப்தற்கான ரேடியேட்டர் வசதியை பெற்றுள்ளது.

அடுத்த சில மாதங்களில் இந்த எலக்ட்ரிக் டியூக் பைக் குறித்தான அதிகார்வப்பூர்வ நுட்ப விபரங்கள் வருகை மற்றும் விலை போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேடிஎம் மின்சார டியூக் குறிப்புகள்
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அங்கமாக கேடிஎம் செயல்படுகின்றது.
  • கேடிஎம் நிறுவனம் சர்வதேச சந்தைகளில் மின்சார பைக் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
  • சோதனை ஓட்ட மாடலில் இடம்பெற்றுள்ள பைக்கின் நுட்பவிபரங்கள் வெளியாகவில்லை.

சோதனை ஓட்ட படங்கள் உதவி – Motorcyclenews.com