60-70களில் பிரசத்தி பெற்று விளங்கிய கார்களை வடிவமைத்தவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான புகழ்பெற்ற டாம் டஜார்டா அவர்கள் தனது 82 வது வயதில் மறைந்துள்ளார். பிரபலமான ஃபோர்டு முதல் ஃபெராரி உள்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பினின்ஃபாரினா போன்ற டிசைன் நிறுவனங்களிலும் பணியாற்றியவர் ஆவார்.
டாம் டஜார்டா மறைவு
பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கார்களுக்கு டிசைன் மற்றும் இன்டிரியர் வடிவமைத்துள்ள டாம் 1934 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவரின் பூர்வீகம் நெதர்லாந்து ஆகும்.
புகழ்பெற்ற ஃபியட் 124 ஸ்பைடர், முதல் தலைமுறை ஃபோர்டு ஃபியஸ்டா மாடல், டிடோமோஸா பேன்டிரா, ஃபெராரி 335 ஜிடி போன்ற பல்வேறு கார்களுக்கு வடிவமைப்பாளராகவும் , ஹியா , பினின்ஃபாரினா போன்ற டிசைன் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். மேலும் லான்சியஸ், சாப்ஸ், இசுசூ, சீட், லாஃபோராஸ் ஃபியட், கிறைஸ்லர், ஃபோர்டு என பல்வேறு நிறுவனங்களுக்கு கார்களை வடிவமைத்துள்ளார்.